Tuesday, January 7, 2014

உணவகங்களில் பில்களுக்கு என்னென்ன வரிகள் விதிக்கப்படுகின்றன?

உணவகங்களுக்கு சென்று நாம் சாப்பிடும் பில்களோடு சேர்த்து பலவிதமான வரிகளைக் கட்ட வேண்டும். பலருக்கும் அந்த பில்களுக்கு விதிக்கப்படும் வரிகளைப் பற்றி தெரியாது. எனினும் வேறு வழியின்றி சாப்பிட்டு முடித்துவிட்டு அந்த வரிகளையும் கட்டிவிட்டு வருவர். குறிப்பாக ஏசி வசதி செய்யப்பட்ட உணவகங்களில் சாப்பிடுவதற்கு முன், சாப்பாட்டு பில்களுக்கு விதிக்கப்படும் வரிகளைப் பற்றித் தெரிந்திருப்பது நல்லது. என்னென்ன வரிகள் விதிக்கப்படுகின்றன என்று பார்ப்போம்.

சேவை கட்டணம்

பொதுவாக பில்லில் குறிப்பிடப்பட்டிருக்கும் மொத்த தொகையில் 10 சதவீதம் டிப்ஸ் அல்லது சேவை கட்டணம் (சர்வீஸ் சார்ஜ்) என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. எனவே பரிமாறிய சர்வருக்கு நாம் டிப்ஸ் தர வேண்டிய அவசியமில்லை. ஏனனில் அவருக்கான டிப்ஸ் அல்லது சர்வீஸ் சார்ஜ் ஏற்கனவே நமது பில்லில் சேர்க்கப்பட்டிருக்கும். எனினும் பலர் தனியாக டிப்ஸ் தருகின்றனர்.

சேவை வரி

உணவகங்கள் தாங்கள் வழங்கும் சேவைக்கு சேவை வரியையும் விதிக்கின்றன. இந்த சேவை வரி 12.36 சதவீதமாகும். ஏசி வசதி கொண்ட உணவகங்களில் 40 சதவீத சேவை வரி விதிக்கலாம் என்று வருவாய் சேவை வரி துறையின் சட்ட புத்தகம் தெரிவிக்கிறது.

எனவே சாப்பாட்டிற்கான கட்டணம் மற்றும் சேவை கட்டணம் ஆகியவை இணைக்கப்பட்டு அவற்றிற்கு 4.94 சதவீதம் வரி விதிக்கப்படும்.

வாட் வரி

வாட் வரி எப்போதுமே மக்களுக்கு குழப்பமாகத்தான் இருக்கிறது. வாட் வரி சேவை கட்டணத்துக்கு தான் விதிக்கப்படுகிறதே தவிர மொத்த பில் தொகைக்கும் அல்ல.

பாட்டில்களில் அடைக்கப்பட்டிருக்கும் தண்ணீர், குளிர்பானங்ள் மற்றும் பேக் செய்யப்பட்ட உணவு போன்றவற்றிற்கு வாட் வரி விதிக்கப்படக் கூடாது. எனினும் இந்தியாவில் வாட் வரி மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடுகிறது.

கீழ்வரும் எடுத்துக்காட்டைப் பார்ப்போம்:

உணவு = ரூ.1000.00
சேவை கட்டணம் 10% = ரூ.100.00
சேவை வரி 4.94% = ரூ.54.34
வாட் 14.5% = ரூ.154.00
மொத்தம் = ரூ.1299.34

சேவை வழங்கப்பட்டால் மட்டுமே வாடிக்கையாளரிடம் சேவை வரி வாங்க வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ளவாறு சேவை கட்டணத்துக்கு மட்டுமே சேவை வரி விதிக்க வேண்டும். மொத்த பில்லுக்கும் சேர்த்து சேவை வரி விதிக்கக் கூடாது. எனினும் உணவகங்கள் விதிக்கும் வரிகளில் இன்னும் ஏராளமான குழப்பங்கள் உள்ளன. இந்த குழப்பங்கள் விரைவில் தீர்க்கப்பட்டால் மக்கள் பயனடைவார்கள்.

தமிழ்காரன் தகவல்களை தேடித் தருபவன்

ஏ.டி.எம் பிரச்சினைக்கு எங்கே புகார் செய்வது?

பெரும்பாலான சமயங்களில் ஏ.டி.எம்.-ல் ஏற்படும் தவறான நடவடிக்கைகளால்தான் மக்கள் பணத்தை இழக்கிறார்கள். ஏ.டி.எம். இயந்திரத்தில் இருந்து நீங்கள் பணம் எடுக்க முயலும்போது பணம் வரவில்லை. ஆனால், உங்கள் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டதாக உங்கள் பாஸ்புக்கில் பதிவாகிறது. அல்லது நீங்கள் 10,000 ரூபாய் எடுக்க முயற்சிக்கிறீர்கள். ஆனால், வெறும் 1,000 ரூபாய் மட்டுமே கிடைக்கிறது. ஆனால், உங்கள் பாஸ்புக்கில் 10,000 ரூபாய் பணம் எடுக்கப்பட்டிருப்பதாக உள்ளது. ஏ.டி.எம்.-ல் பணம் எடுக்கும்போது இப்படி பல பிரச்னைகள் ஏற்படலாம். இந்தப் பிரச்னைகள் அந்த ஏ.டி.எம். மெஷினிலோ அல்லது மின்சாரக் கோளாறினாலோ அல்லது சர்வர் (Server) இயந்திரத்தில் வரும் பிரச்னைகளினாலோ ஏற்படக்கூடும்.

எங்கு புகார் செய்வது..?

ஏ.டி.எம்.-ல் பணம் எடுக்கும்போது இதுமாதிரியான பிரச்னை உங்களுக்கு ஏற்பட்டால், எந்த வங்கி உங்களுக்கு ஏ.டி.எம். கார்டை வழங்கியதோ, அந்த வங்கியில் உடனடியாக புகார் (Complaint) செய்யவும். ஏ.டி.எம். சென்டருக்குள்ளேயே உடனடி புகார் செய்ய வேண்டிய தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டிருக்கும்.

ஏ.டி.எம்.-ல் இருந்து பணம் எடுத்ததற்கான ரசீதை (transaction) ஜெராக்ஸ் எடுத்து அதை கவனமாக வைத்துக்கொள்ளவும். அந்த ஸ்லிப்பில் ரெஸ்பான்ஸ் கோட் '00’ அல்லது '054’ இருக்கிறதா என்று பார்க்கவும். '00’ என்று வந்தால் அந்த பணப்பரிமாற்றம் சரியானது. '054’ என்று வந்தால் அந்தப் பணப்பரிமாற்றம் தவறானது.

கேட்டுப் பெறவேண்டியவை!

ஏ.டி.எம். தொடர்பான உங்கள் புகார்களை தெரிவிக்கும்போது வங்கியிடமிருந்து கேட்டுப் பெறவேண்டியவை, 1. சர்ச்சைக்குரிய பணப்பரிமாற்றத்திற்கான கணக்கு விவரத்தின் பிரதி, 2. எலெக்ட்ரானிக் ஜர்னல் (Journal), ஜர்னல் பிரின்ட் எனப்படும் பரிமாற்றம் நடந்ததற்கான தகவல் பிரதி.
3. வாடிக்கையாளர் பணம் எடுக்கும்போது ஏ.டி.எம். இயந்திரத்தால் பதிவு செய்யப்படும் நடவடிக்கை விவரங்கள் மற்றும் 4. வாடிக்கையாளர் கணக்கில் இருப்புத் தொகை போன்ற விவரங்கள். சரியான முறையில் பணம் வழங்கி யிருந்தாலும், பணம் வழங்காமல் போனாலும் இந்த விவரங்கள் அதில் பதிவாகி இருக்கும். அதன் பிரதி ஒன்று.

5. சம்பந்தப்பட்ட ஏ.டி.எம். இயந்திரத்தில் ஒருநாளின் முடிவில் எடுக்கப்பட்ட சரி செய்தலுக்கான விவரங்கள் மற்றும் பணம் சரிபார்த்தல் ரிப்போர்ட் ஆகியவற்றின் பிரதி.

6. வாடிக்கையாளர் பணம் எடுக்கும்போது எடுக்கப்பட்ட ஏ.டி.எம். காமிரா மற்றும் சி.சி.டிவி-யின் கண்காணிப்பு பதிவுகளடங்கிய சிடி அல்லது டிவிடி ஒன்று.

7. பணப்பரிமாற்ற நடவடிக்கையின் ஸ்விட்ச் ரிப்போர்ட்.

இது சம்பந்தமாக இந்திய ரிசர்வ் வங்கியின் நெறிமுறைகள்படி, வாடிக்கையாளருக்கு ஏ.டி.எம். கார்டு வழங்கிய வங்கியானது, இந்த புகார் மீது நடவடிக்கை எடுத்து, புகார் பெற்ற 7 நாட்களுக்குள் வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட நஷ்டத்தை சரிசெய்வது அவசியம்.

ஏழு நாட்களுக்கு மேல் தாமதம் ஏற்பட்டு, அதுபற்றி வாடிக்கையாளர் 30 நாட்களுக்குள் புகார் தருவாரேயானால், கார்டு வழங்கிய வங்கி நாளன்றுக்கு 100 ரூபாய் வீதம் அபராதமாகத் தரவேண்டியிருக்கும்.



வங்கியானது வாடிக்கையாளர் அடைந்த நஷ்டத்துக்கீடான பணத்தை வரவு வைக்காவிட்டாலோ அல்லது இத்தகைய புகார்களுக்கு வங்கி பதில் ஏதும் அளிக்காமல் போனாலோ, அந்தப் பகுதியைச் சேர்ந்த வங்கி குறைதீர்ப்பு ஆணையத்திடம் புகார் அளிக்கலாம்.

வீட்டுக் கடன் வாங்கும் போது மறக்காம வீடு காப்பீட்டுத் திட்டத்தையும் செய்யுங்கள் !!

வீட்டுக் கடன் வாங்குற எல்லாருமே ரெண்டு வகையான இன்ஷூரன்ஸ்களை கட்டாயம் எடுத்துக்கணும். ஒண்ணு கடனுக்கு! இன்னொண்ணு வீட்டுக்கு!

கடன் வாங்கினவருக்கு திடீர்னு ஏதாச்சும் அசம்பாவிதம் ஏற்பட்டா, கடனைக் கட்ட முடியாம மனைவி, பிள்ளைகள் கஷ்டப்படக் கூடாதில்லையா.. அதனால வீட்டுக் கடனுக்கு இன்ஷூரன்ஸ் அவசியம்.புயல், வெள்ளம், பூகம்பம், தீவிரவாதத் தாக்குதல் மாதிரியான பிரச்னைகள்ல சிக்கி வீடு பாதிக்கப்பட்டா, மொத்தமா இடிஞ்சுபோய் உட்கார்ந்திடாம இருக்க வீட்டுக்கும் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கணும். இதுக்கு வீட்டு உரிமையாளர் பாலிசினு பேர்.

ஒருவர், தன்னோட 30 லட்ச ரூபாய் வீட்டுக் கடனை 15 வருஷத்துல திருப்பிக் கட்டுறார்னு வச்சுக்குவோம். அவர், இந்தக் கடன் தொகைக்கு இன்ஷூரன்ஸ் எடுத்தா வருஷத்துக்கு சுமார் 13 ஆயிரம் ரூபாய் பிரீமியம் கட்ட வேண்டியிருக்கும். இதை மூணு மாசத்துக்கு ஒரு தடவை பிரிச்சுக் கட்டிக்கிற வசதியும் இருக்கு.

கடனை திரும்பச் செலுத்துற முழு காலத்துக்கும் மொத்தமா சேர்த்து பிரீமியம் கட்டினா லாபமானதா இருக்கும். அதாவது, அவர் சுமார் 65 ஆயிரம் ரூபாய் மொத்தமா கட்டினா போதும். 15 வருஷத்துக்கும் கவர் ஆயிடும். இடையில பிரீமியம் எதுவும் கட்ட வேண்டியதில்லை. இந்த இன்ஷூரன்ஸூக்கு கட்டுற பிரீமியத்துக்கு 80-சின் கீழ் வரிச் சலுகை இருக்கு.

வீட்டுக்கான இன்ஷூரன்ஸூக்கு பிரீமியம் ரொம்ப கம்மிதான். 10 லட்ச ரூபாய்க்கு பாலிசி எடுத்தா, அதிகபட்ச ஆண்டு பிரீமியம் 650 ரூபாய்தான் வரும். இதுவே 5 வருஷத்துக்கான பிரீமியத்தை மொத்தமா கட்டுனா, பிரீமியத்துல 40% தள்ளுபடி கிடைக்கும்.

பெரும்பாலான வங்கிகள் மற்றும் வீட்டு வசதி நிறுவனங்கள்ல, கடன் கொடுக்கும்போது இந்த ரெண்டு வகையான இன்ஷூரன்ஸையும் அவங்களே எடுத்து, அதைக் கடன் தொகையோட சேர்த்துடுவாங்க.
Source:- தமிழ்காரன் தகவல்களை தேடித் தருபவன்

விவாகரத்து பற்றி சமயங்களின் சட்டங்கள்

இரு மனங்கள் இணையும் திருமணத்தில், ஏதோ ஒரு மனம் உடன்பட முடியாவிட்டால் திருமணத்திற்கு முன்னரே பிரிவது அனைவருக்கு ம் நலம் பயக்கும். ஆனால் இந்திய திருமணச் சூழலில் திருமணத்திற்கு முன் மணம் செய்து கொள்ளவிருக்கும் இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வது அவ்வளவு எளிதல்ல. உரிய காரணம் இன்றி பிரியும் துணையை மீண்டும் அழைக்க ‘மண வாழ்வுரிமை மீட்பு சட்டம்’ பயன்படுகிறது.

பொருந்தாத திருமணத்திற்குப்பின், பிரிவதைத்தவிர வேறு வழியில்லை என்று முடிவெடுப்பவர்களுக்கும் சட்டம் வழி காட்டுகிறது. சிறப்புத் திருமணச் சட்டத்தின் பிரிவு 27, இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு 13, (கிறிஸ்தவர்களுக்கான) இந்திய திருமண முறிவுச் சட்டம் ஆகியவை மத சடங்குகளில் ஈடுபாடு இல்லாதவர்கள் (Agnostics), நாத்திகர்கள் (Atheists), இந்துக்கள், கிறிஸ்தவர்கள் ஆகியவர்களுக்கான மணமுறிவு உரிமைகளை விளக்குகின்றன.

சிறப்புத் திருமணச் சட்டம்

சிறப்புத் திருமணச் சட்டத்தின்படி
1. வாழ்க்கைத் துணைவர் அல்லாத வேறொருவருடன் விரும்பி உடலுறவு கொள்ளுதல்,
2. மனுதாரரை உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ கொடுமை செய்தல்,
3. மனுதாரரை இரண்டுக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு கைவிட்டுச் செல்லுதல்,
4. தம்பதிகளில் ஒருவர் தீர்க்க முடியாத அளவில் மனநோய்க்கு ஆளாதல்,
5. தம்பதிகளில் ஒருவர் எளிதில் தொற்றக்கூடிய பால்வினை நோயால் பாதிக்கப்படுதல்,
6. தம்பதிகளில் ஒருவர் தொடர்ந்து ஏழு ஆண்டுகளுக்கு மேலாக உயிருடன் உள்ளாரா? இல்லையா? என்பதை தெரியாதிருத்தல்,
7. திருமணமான கணவன் ஓரினப்புணர்ச்சி(Sodomy), விலங்குகளுடன் புணர்ச்சி (Bestiality) கொண்ட குற்றம் செய்தல்,
8. தம்பதிகளில் ஒருவர் இந்திய தண்ட னை சட்டத்தில் கூறப்பட்டுள்ள குற்றம் ஒன்றிற்காக ஏழு ஆண்டுகளுக்கு குறையாத சிறைத் தண்டனை பெறுதல்
ஆகிய சூழ்நிலைகளின்போது பாதிக்கப் பட்டவர் உரிய நீதிமன்றத்தை அணுகி மணமுறிவு கேட்டு மனுச் செய்யலாம்.

இந்து திருமணச் சட்டத்தின்படி திருமணம் செய்தவர்கள், காரணம் 8 தவிர மேற்கண்ட காரணங்களுக்காகவோ, கணவரோ / மனைவியோ இல்லறத்திலிருந்து விலகி துறவறம் மேற்கொண்டாலோ, இந்து மதத்திலிருந்து வேறு மதத்திற்கு மாறினாலோ அதைக் காரணமாகக் கூறி மணவிலக்குக் கோரலாம்.

கிறிஸ்தவ திருமணச் சட்டத்தின்படி திருமணம் செய்த ஒரு ஆண், மனைவியை மணவிலக்கு செய்ய வேண்டுமெனில், திருமணத்திற்கு பின்னர் மனைவி மாற்றானுடன் உடலுறவு செய்தால் மட்டும் அதை நிரூபித்து மணவிலக்கு கோரலாம்.

கிறிஸ்தவர்களுக்கான சட்டம்

கிறிஸ்தவ திருமணச் சட்டப்படி

1. திருமணத்திற்கு பின் கிறிஸ்தவ மதத் தொழிலை விட்டு விலகி வேறு மதம் சார்ந்த தொழிலை மேற்கொண்டாலோ,
2. உடலுறவு கொள்ளத் தடை செய்யப்பட்ட உறவு முறையில் உள்ள வேறு ஒரு பெண்ணோடு உடலுறவுக் குற்றம் (incestuous adultery) புரிந்தாலோ,
3. மற்றொரு பெண்ணை இரண்டாவதாக மணம் செய்து கொண்டு அவளுடன் பிறன் மனைப் புணர்ந்தாலோ (bigamy with adultery),
4. வன்முறைப்புணர்ச்சி, இயற்கைக்கு மாறான புணர்வு, விலங்குகளுடன் புணர்தல்,
5. நெறிகெட்ட வாழ்க்கை காரணமாக பெண்ணைக் கொடுமை செய்தாலோ,
6. இரண்டு ஆண்டுகளுக்கு மேல் மனைவியை துறந்து சென்று விட்டாலோ,
7. ஆண்மையற்று இருந்தாலோ
உரிய நீதிமன்றத்தில் மணவிலக்குக் கோரலாம்.

இஸ்லாமியர்களுக்கான சட்டம்
இஸ்லாமிய ஆண்களுக்கு மணமுறிவு குறித்து அளிக்கப்படும் உரிமைகள் எல்லை அற்றதாக உள்ளது.

மனைவிக்கு காரணத்தை தெரிவிக்காமலே “தலாக்” எனப்படும் மணமுறிவை அறிவிக்க இஸ்லாமிய ஆண் உரிமை படைத்தவனாகிறான். மேலும் மனைவிக்கு தெரிவிக்காமலே கூட தலாக்கை செயல்படுத்தும் திறன் இஸ்லாமிய ஆண்களுக்கு இருக்கிறது. இதில் நீதி மன்றம் தலையிடுவதில்லை.

இந்தியாவில் உள்ள இஸ்லாமிய பெண் களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இஸ்லாமியர்கள் திருமண இழப்பு சட்டம், 1939ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி:
  1. நான்கு ஆண்டுகளுக்கு மேல் கணவன் காணாமல் போய் விட்டால், மனைவிக்கு தேவையான பராமரிப்பு செலவுத்தொகையை கணவன் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு கொடுக்கத் தவறினால்,  
  2. கணவனுக்கு ஏழு ஆண்டுகளோ, அதற்கு அதிக மாகவோ சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால், 
  3. கணவனுக்கு விதிக்கப்பட்ட திருமணக்கடமைகளான மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுதல், குழந்தைகளை பராமரித்தல் ஆகியவற்றை கணவன் மூன்று ஆண்டுகளுக்கு புறக்கணித்தால், 
  4. கணவன் ஆண்மையற்று இருந்தால், 
  5. தொழுநோய் பீடிக்கப்பட்டிருந்தால், 
  6. தொற்றக்கூடிய பால்வினை நோய் இருந்தால், 
  7. திருமணத்திற்கு தேவையான மனவளர்ச்சி இல்லாமலிருந்தால்
…பாதிக்கப்பட்ட இஸ்லாமியப் பெண் உரிய நீதிமன்றத்தை அணுகி மணமுறிவு பெறலாம்.

இத்தகைய வழக்கு விசாரணைகளை பொதுவில் நடத்தாமல், மூடிய அறைக்குள் நடத்தவும் (In Camera Proceedings), வழக்கு விவரங்களை செய்தியாளர்கள் வெளியிடாமல் தடுக்கவும் முடியும். வழக்கு தரப்பினர்கள் உடன்படும் நிலையில் வழக்கு விசாரணையை துரிதப்படுத்தி இசைவின் பேரில் மணமுறிவு (Divorce by Mutual Consent) பெறவும் இயலும்.

இத்தகைய மணமுறிவு கேட்கும் தரப்பினர் உரிய வருவாய் இன்றி அவதியுறும் நிலையில், எதிர் தரப்பினர் வருவாய் படைத்தவர் என்று நிரூபிக்க இயலும் நிலையில் மனுதாரருக்கு தற்காலிக அல்லது நிரந்தர பராமரிப்பு கோரவும் இயலும்.

உங்கள் துணையிஅடம் இருந்து விவாகரத்து கோரும் நீங்கள், உங்களது எதிர்காலம் மற்றும் உங்களது குழந்தைகளின் எதிர்காலத்தை சற்று சிந்தித்து  முடிவெடுக்க‍ வேண்டுகிறோம்.

Source: -பி. சுந்தரராஜன், வழக்க‍றிஞர் - தமிழ்காரன் தகவல்களை தேடித் தருபவன்

இந்திய தண்டனைச் சட்டங்கள்

இந்திய தண்டனைச் சட்டம் / குற்றங்களின் வகைப்பாடுகள்:
இ.பி.கோ. 1 முதல் 5 வரை அறிமுகம்
இ.பி.கோ. 6 முதல் 52 வரை பொது விளக்கங்கள்
இ.பி.கோ. 53 முதல் 75 வரை தண்டனைகள்
இ.பி.கோ. 76 முதல் 106 வரை தனியார் பாது காப்பு உரிமைகளின் பொது விதிவிலக்குகள்
இ.பி.கோ. 107 முதல் 120 வரை உடந்தை
இ.பி.கோ. 120எ முதல் 120பி வரை குற்றவியல் சதி
இ.பி.கோ. 131 முதல் 140 வரை இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை தொடர்பான குற்றங்கள்
இ.பி.கோ. 141 முதல் 160 வரை பொதுமக்களின் அமைதிக்கு எதி ரான குற்றங்கள்
இ.பி.கோ. 161 முதல் 171 வரை அரசு ஊழியர்கள் தொடர்பான குற்றங்கள்
இ.பி.கோ. 172 முதல் 190 வரை அரசாங்க ஊழியர்களின் சட்டப் பூர்வ ஆணையம் தொடர்பான அவமதிப்புகள்
இ.பி.கோ. 191 முதல் 229 வரை பொது நீதிக்கு எதிரான பொய்யான ஆதாரங்கள் மற்றும் குற்றங்கள்
இ.பி.கோ. 230 முதல் 263 வரை நாணயம் மற்றும் அரசு அஞ்சல் தலைகள் தொடர்பான குற்றங்கள்
இ.பி.கோ. 264 முதல் 267 வரை பொது நீதிக்கு எதிரான பொய்யானஆதாரங்கள் மற்றும் குற்றங்கள்
இ.பி.கோ. 268 முதல் 294 வரை பொது சுகாதாரம், பாதுகாப்பு, வசதி, நாகரீகம் மற்றும் ஒழுக்கம் பாதிக்கும் குற்றங்கள்
இ.பி.கோ. 295 முதல் 298 வரை பொது மதம் தொடர்பான குற்றங் கள்
இ.பி.கோ. 299 முதல் 377 வரை 1. கொலை குற்றத்துக்குரிய படுகொலை
(பிரிவு 299 முதல் 311) உள்ளிட்ட வாழ்க்கை பாதிக்கச் செய்கின்ற குற்றங்களை
2. கருத்சிதைவு தொடர்பான குற்றங்;கள் (பிரிவு 312 முதல் 318)
3.காயப்படுத்துதல் (பிரிவு 319 முதல் 338)
4. தவறான கட்டுப்பாடு மற்றும் தவறான வரையறை(பிரிவு 339 முதல் 348)
5.குற்றவியல் தாக்குதல் (பிரிவு 349 முதல் 358)
6.கடத்தல் அடிமைப்படுத்துதல் மற்றும் கட்டாய தொழில் வலியுறுத் தல் (பிரிவு 359 முதல் 374)
7. கற்பழிப்பு உள்ளிட்ட பாலியல் குற்றங்கள் (பிரிவு 375 முதல் 376)
இ.பி.கோ. பிரிவு 299 முதல் 377 மனித உடல் பாதிக்கும் குற்றங்கள்:
1. மனித உடல் பாதிக்கும் குற்றங்கள் அதாவது கொலை, குற்றத்துக் குரிய படுகொலை உள்ளிட்ட வாழ்க்கை பாதிக்கச்செய்கின்ற குற்ற ங்களுக்கு (பிரிவு 299 முதல் 311)
2. கருச்சிதைவு தொடர்பான குற்றங்களுக்கு (பிரிவு 312 முதல் 318)
3. ஒருவரை காயப்படுத்துதல் (பிரிவு 319 முதல் 338)
4. தவறான கட்டுப்பாடு மற்றும் தவறான வரையறை (பிரிவு 339 348 போன்ற)
5. குற்றவியல் தாக்குதல் (பிரிவு 349 முதல் 358)
6. கடத்தல், அடிமைப்படுத்துதல் மற்றும் கட்டாய தொழில் செய்ய வலியுறுத்தல் (பிரிவு 359 முதல் 374)
7. கற்பழிப்பு உள்ளிட்ட பாலியல் குற்றங்கள் (பிரிவு 375 முதல் 376)
8. செயற்கை குற்றங்களுக்கு (பிரிவு 377)
இ.பி.கோ. பிரிவு 378 முதல் 462 சொத்து தொடர்பான குற்றங்கள்:
1. திருட்டு (பிரிவு 378 முதல் 382)
2. பலாத்காரம் (பிரிவு 383 முதல் 389)
3. திருட்டு மற்றும் கொள்ளை (பிரிவு 390 முதல் 402)
4. சொத்து குற்றவியல் மோசடி (பிரிவு 403 முதல் 404)
5. குற்றவியல் நம்பிக்கை துரோகம் (பிரிவு 405 முதல் 409)
6.திருடிய சொத்து பெறுவது (பிரிவு 410 முதல் 414)
7. ஏமாற்றுதல் (பிரிவு 415 முதல் 420)
8. மோசடி செயல்கள் மற்றும் சொத்து அபகரித்தல் (பிரிவு 421 முதல் 424)
9. குறும்புகள் (பிரிவு 425 முதல் 440)
10. குற்ற மீறல் பற்றிய செயல்கள் (பிரிவு 441 முதல் 464)
ஆவணங்கள் மற்றும் சொத்து தொடர்பான குற்றங்கள் (பிரிவு 463 முதல் 489 வரை)
சொத்து (பிரிவு 478 முதல் 489)
நாணய குறிப்புகள் மற்றும் வங்கி அறிக்கை (பிரிவு 489எ வேண்டும் 489இ)
இ.பி.கோ. பிரிவு 490 முதல் 492 வரை சேவை ஒப்பந்தங்கள் குறித்த சட்ட மீறல்கள்:
கணவன் அல்லது கணவனின் உறவினரால் துன்புறுத்தப்படுதல் (பிரிவு 498 (a) (குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம்ு)
மான நஷ்ட வழக்குகள் (பிரிவு 499 முதல்502 வரை)
சட்ட விரோத மிரட்டல் அவமதிப்பு (பிரிவு 503 முதல் 510 வரை)
குற்றம் செய்ய முயல்வது. (பிரிவு 511)
சட்ட சீர்திருத்தங்கள்
1, பிரிவு 377 இந்தியாவில் பாலியல் சிறுபான்மையினர் நியாயமான உரிமைகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டு வந்தன. தற்போது அந்த பகுதியில் எயிட்ஸ் நோய் கட்டுப்பாட்டை கையாள்வதில் மிக பெரியதடையாக இருந்து வந்தது. ஆனால் ஜூலை 2 2009 முதல் டில்லி உயர் நீதி மன்றம் இப்பகுதியில் ஒரு முற்போக்கா ன விளக்கம் கொடுத்தது. இந்த பிரிவில் இரண்டு ஆண்கள் இடையே பரஸ்ப்பர ஒப்புதலுள்ள பாலியல் உடலுறவு சட்டம் தண்டிக்க பயன்படுத்த முடியாது என்றது.
2. பிரிவு 309 தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு தோல்வி அடைந்தவர்களை தண்டனை வழங்குகிறது. மாறாக பொருத்தமான ஆலோசனை வழங்குவதே சிறந்தது என்பதே பலரின் கருத்து.
3 பிரிவு 497ன் கீழ் மற்றொரு நபர்கள் மனைவியுடன் ஒபபுதலுள்ள உடலுறவு வைத்துக் கொள்ளும் ஆண்களை தண்டிக்கிறது.

Power-of-Attorney For Registration Documents

Section 32 of the Indian Registration Act requires that documents meant for registration are to be presented for the said purpose at the proper registration office. Documents are some times executed and signed by the power-of-attorney agents of the concerned principals and the same power-of-attorney agents present such documents for registration. On the other hand law permits a person to execute and sign documents personally and delegate an agent for presenting such documents for registration. In the first instance execution and registration of the document are by the same person – the duly authorized agent. In the second case, execution of documents is by the author of the document personally but the registration process is completed by an agent. In both cases authority is to be delegated by a duly executed power-of-attorney.

Now the question arose whether power-of-attorneys issued for the purpose of executing and registering documents are to be registered compulsorily. The Hon. Supreme Court of India in the judgment delivered in C A No.xxxx/2004 ( Rajni T Vs Dulal R G) decided on 29th July 2009 has finally resolved the said issue.

Hon. Supreme Court has made a distinction between the Power-of-attorney meant for execution and registration of documents and the power-of-attorney meant only for registration of documents already executed and signed by its maker and has made it clear that power-of-attorneys of the first category need not compulsorily be registered while power-of-attorneys of the second category are to be registered compulsorily. 

Source: Kerala Law .com - Legal Literacy Online, Kerala

நீங்கள் கைது செய்யப்பட்டால் உங்கள் உரிமைகள் என்ன?

"கைது" என்ற சொல் கைது செய்தல் அல்லது தடுத்தல் அல்லது ஒருவரின் சுயசுதந்திரத்தை பறித்தல் என்று பொருள்களில் கையாளப்படுகிறது.

குற்றம் சாட்டப்பட்ட நபரின் சுதந்திரம் தடைபட ஆரம்பிக்கும் போதே கைது நடவடிக்கை தொடங்கி விடுகின்றது.

ஆரம்பக் காலங்களில் ஜாமீனில் விடக்கூடிய குற்றங்களுக்குக் கூட கைவிலங்கு மாட்டுவார்கள். திரைப்படங்களில் காண்பிப்பது போல விலங்கு மாட்டி வீதி வீதியாக அழைத்துக் கொண்டு காவல் நிலையம் செல்வர். இது போன்ற செயல்களை வன்மையாக கண்டித்த உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும்  இது தொடரக்கூடாது என்றும், பயங்கரவாதிகள், தீவிரவாதிகள், காவல்துறையின் பிடியில் இருந்து தப்பித்து செல்லக் கூடியவர்களுக்கு மட்டுமே விலங்கு போடலாம் என்றும் கட்டளையிட்டுள்ளது. இனி கைது செய்யப்பட்டோரின் உரிமைகளைக் காண்போம்.
1. உங்கள் கைதுக்கான காரணங்கள் உங்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.

2. பிடிப்பாணையின் (Warrant) பேரில் நீங்கள் கைது செய்யப்பட்டிருந்தால், பிடிப்பாணையை பார்க்க உங்களுக்கு உரிமை உண்டு

3. உங்கள் விருப்பத்திற்கேற்ப வழக்கறிஞரை கலந்தாலோசிக்கும் உரிமை உங்களுக்கு உண்டு

4. 24 மணி நேரத்திற்குள் அருகில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் (Judicial Magistrate) முன்பாக நீங்கள் கொண்டு செல்லப்பட வேண்டும்

5. பிணையில் (Bail) விடுவிக்க பட கூடியவரா என்பது உங்களுக்கு தெரிவிக்கப்படவேண்டும்

விலங்கிடலாமா?

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் படி ஒருவர் வன்முறையாளராகவோ அல்லது மூர்க்கமான குண இயல்பு கொண்டவராகவோ அல்லது தப்பி ஓட முயல்பவராகவோ அல்லது தற்கொலைக்கு முயல்பராகவோ இருந்தால் ஒழிய கைது செய்யப்பட நபருக்கு விலங்கிட கூடாது.

கைது என்பது தண்டனையல்ல. நீதி மன்ற தீர்ப்பு வரும் வரை குற்றம் இழைத்தவராக ( Convict ) கருத முடியாது

கைது செய்யப்பட நபரை காவலில் வைத்தல்

கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படும் எந்தவொரு நபரும் கைது செய்து 24 மணி நேரத்திற்குள்ளாக (கைதான இடத்திலிருந்து நீதி மன்றம் செல்ல தேவைப்படும் பயண நேரம் நீங்கலாக) அருகில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பாக ஆஜர் செய்யப்பட வேண்டும்.

கைது செய்யப்பட்ட நபரை 24 மணி நேரத்திற்கு மேல் காவலில் வைக்க குற்றவியல் நீதித்துறை நடுவருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு.

காவல் துறைக்கு இல்லை.

குற்றவியல் நீதித்துறை நடுவரின் முன் ஆஜர் செய்யப்பட்டு அவர் காவலில் தொடர சொன்னால் ஒழிய 24 மணி நேரத்திற்கு மேல் ஒரு நிமிடம் கூட காவலில் வைக்க கூடாது.

*******

கைது குறித்து உச்சநீதிமன்றத்தின்  கட்டளைகள்

1. கைது செய்கின்ற அதிகாரி அடையாள அட்டை பொருத்தியிருக்க வேண்டும். இதனுடைய நோக்கம் என்னவென்றால் குற்றம் சாட்டப்பட்டவருக்குத் தம்மைக் கைது செய்யும் அதிகாரியின் பெயர் என்ன? அவர் என்ன ரேங்க்  என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத்தான்.

2. கைது செய்தவுடன் அந்த இடத்திலேயே கைது குறிப்பு தயார் செய்யவேண்டும். அந்தக் கைது குறிப்பில் ஒரு சாட்சியம் கையெழுத்து வாங்க வேண்டும் மற்றும் அதில் கைது செய்யப்படட நேரம் காணப்படவேண்டும்.

3. கைது செய்யப்படும் தகவலை உறவினர் / நண்பர் / தெரிந்தவருக்குத் தெரிவிக்கவேண்டும்.

4. கைது செய்யப்பட்ட விபரத்தை 8 முதல் 12 மணி நேரத்திற்குள் உறவினருக்கு அறிவிக்க வேண்டும்.

5. தான் விரும்பும் ஒருவருக்கு தகவல் தெரிவிப்பதற்கான உரிமை உண்டு என்பதை கைது செய்யப்பட்டவருக்கு தெரிவிக்க வேண்டும்

6. காவல்துறை அதிகாரி குற்றம் சாட்டப்பட்டவரைக் கைது செய்யும் போது என்ன குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார் என்ற விபரத்தை அவருக்குத் தெரியப்படுத்தவேண்டும்.

7. கைது செய்த பின்பு, நேரடியாக காவல் நிலையத்திற்குக் கொண்டுச் செல்ல வேண்டும். அதே போல் காவல்நிலையத்தில் உள்ள டைரியில் மேலே கண்ட விவரங்கள் பதியப்படவேண்டும்.

8. கைது செய்யப்பட்டவர் உடல் நிலையை 48 மணி நேரத்திற்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்து சோதனை குறிப்பு தயார் செய்ய வேண்டும். அதில் காவல்துறை அதிகாரியும், கைதியும் கையொப்பம் செய்ய வேண்டும். மேலும், அதனுடைய நகல் கைது செய்யப்பட்டவருக்குத் தரப்படவேண்டும்.

9. கைது செய்யப்பட்டவர் விரும்பினால், தகுதி வாய்ந்த மருத்துவரால் சோதனை செய்யவேண்டும்.

10. மேலே கூறப்பட்டுள்ள தஸ்தாவேஜூகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட செயல்துறை நடுவருக்கு காவல்துறையினரால் அனுப்பி வைக்கப்படவேண்டும்.

11. கைது செய்யப்பட்டவர் காவல்துறையின் காவலில் இருக்கும் போது எதிரி (கைது செய்யப்பட்டவர்) தன்னுடைய வழக்கறிஞரை சந்திக்க விரும்பினால் தடை செய்யக்கூடாது.

12. கைது செய்யப்பட்டவரை விசாரிக்கும் போது வழக்கறிஞர் உடனிருக்க வேண்டும்.

13. எதிரி கைது செய்யப்பட்ட 12 மணிநேரத்திற்குள் அவரது கைது பற்றி மாவட்டத்தில் உள்ள காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்குத் தெரிவிக்கப்படவேண்டும். அவ்வாறு தெரிவிக்கப்படும் தகவல்கள் தனி நோட்டிஸ் போர்டில் இருக்க வேண்டும்.

நிற்க. இவையெல்லாம் நிஜத்தில் காவல் துறை செய்கிறதா அப்படி அவர்கள் இதன் படி நடக்காவிடில் என்ன செய்வது ?

முடிந்த வரை காவல்துறை இவற்றை செய்யும். அல்லது அவர்கள் ரிக்கார்ட் அப்படி இருக்கும் !

இவற்றில் சில முக்கிய விஷயங்கள் அவர்கள் செய்ய தவறினால் வழக்கறிஞர் மூலம் அதனை கோர்ட் கவனத்துக்கு கொண்டு செல்ல முடியும்.

அத்தகைய நேரங்களில் காவல் துறை அதிகாரியை கோர்ட் கண்டிக்கலாம்.

சில நேரங்களில் சில நடைமுறைகள் பின்பற்றா விட்டால் அதன் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை கூட செய்யலாம்.